பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

பப்புவா நியூ கினியாவின் வடகிழக்கில் வாவ் நகரிலிருந்து 300 கிமீ (186.41 மைல்) தொலைவில் உள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் 7.3 ரிக்டர் அளவுகோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவானதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மதியம் 12.50 மணியளவில் 85 கி.மீ (52 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வாவின் கிழக்கு-தென்கிழக்கில் 18 கிமீ (11 மைல்) தொலைவில் கடலில் தாக்கியது.

உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் பற்றிய உடனடி சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேவேளை கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டது. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆபத்து கடந்துவிட்டதாகக் கூறியது.