கொரோனா அச்சம்! ராஜாங்கனை, ராகமை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகின

கொரோனா அச்சம்! ராஜாங்கனை, ராகமை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியாகின

ராஜாங்கனை, ராகமை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் யாவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 395 பேருக்கு PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ராகமை தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையிலும் தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டதாக வைத்தியர் அனில் ஜாசிங்க கூறினார்.

இதேவேளை, குண்டசாலையில் 101 பேர், கொட்டுகொட பகுதியில் 74 பேர், தந்திரிமலை – ரந்தம்பே பகுதியில் 266 பேர், பொலன்னறுவை வைத்தியசாலைக்கு வருகை தந்த 200 பேர், ராஜாங்கனையில் 150 பேர் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் PCR பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.