தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால எல்லை செப்டெம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் அவர்களது சம்பளத்தின் அரைப்பங்கு அல்லது ஆக கூடிய சம்பளமான 14,500 ரூபாவை செப்டெம்பர் மாதம் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சேவை வழங்குநர்கள், தொழிற்சங்கங்கள், திறன்விருத்தி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

அந்த வகையில், தனியார் துறையினருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை குறித்த தொகையை செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.