கனடாவில் பரவும் ஜாம்பி நோய்.. மனிதனை எப்படி தாக்கும் தெரியுமா?

கனடாவில் பரவும் ஜாம்பி நோய்.. மனிதனை எப்படி தாக்கும் தெரியுமா?

கனடாவில் புதியதாக பரவி வரும் ஜாம்பி நோயால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கனடா நாட்டில் மான்களுக்கு ஜாம்பி நோய் தாக்கியுள்ளன.

இந்த நோய் பரவுவது, அவற்றின் உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றை தொடர்ந்து சுரக்க வைக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்நோய், மூளையின் ப்ரியான் என்னும் புரத அமைப்பை பாதிக்கக்கூடியது. இதனை zombie deer disease என்றும் அழைக்கிறார்கள்.

மேலும், இந்த நோயால் தாக்கப்படும் மான்களின் உடல்மொழியில் மாற்றம் ஏற்படும் எனவும் இதனால் மான்கள் மரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், கனடாவின் ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவன் போன்ற பகுதிகளில் உள்ள மான்களை இந்த நோய் பாதித்து வருகிறது.

இதனால் பல மான்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்தும் மரை மான், கலை மான், சதுப்புநில மான், கட மான் போன்ற பல்வேறு வகையான மான்களையும் இந்த நோய் தாக்கலாம் என தெரிவித்திருக்கிறார்கள் உயிரியல் ஆய்வாளர்கள்.

மனிதனை தாக்குமா?

இந்த நோய் இதுவரையில் மனிதர்களை தாக்கியதில்லை எனக்கூறும் ஆய்வாளர்கள் ஆனால் மனிதர்களை தாக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரித்து உள்ளனர்.

மானி இரத்தம் மூலம் மனிதனுக்கு பரவலாம் என எச்சரிக்கின்றனர். மான்களை வேட்டையாடுவது, நோயுற்ற மான்களை உணவாக உட்கொள்வது, மான்களின் தோல் பொருட்களை கையாள்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.