பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டது!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டது!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்த நாட்டு எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை வெற்றி பெற்றமையை அடுத்து அவரது பதவி பறிக்கப்படுகிறது.

மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றில் 174 உறுப்பினர்கள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இம்ரான் கானுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்த அவநம்பிக்கை பிரேரணை மீது நள்ளிரவில் வாக்கெடுப்பு நடந்தது.

ஆளும் கட்சியினர் வாக்கெடுப்பை தடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்த போதிலும் அந்த நாட்டு உயர்நீதிமன்ற அனுமதியுடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

எதிர்கட்சி அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளபோவதில்லை என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் இல்லாமல் தம்மை நீக்குவதற்காக அமெரிக்கா தலைமையிலான சதி இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தநிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் புதிய பிரதமரை தெரிவு செய்யவுள்ளது.

இதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றம் நாளைய தினம் மீண்டும் கூடவுள்ளது.

அடுத்த பொதுதேர்தல் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில் புதிய பிரதமர் அதுவரையில் தமது கடமைகளை தொடர்வார்.