20 மணிநேரத்துக்குள் பாக்கு நீரிணையை இருமுறை நீந்திக் கடந்து தமிழக சிறுவன் சாதனை!

20 மணிநேரத்துக்குள் பாக்கு நீரிணையை இருமுறை நீந்திக் கடந்து தமிழக சிறுவன் சாதனை!

தமிழகம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன், பாக்கு நீரிணையை, இருவழியாக, 19 மணித்தியாலங்களும், 45 நிமிடங்களில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

சினேகன் என்ற சிறுவனே இன்று இந்த சாதனையைப் படைந்துள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கலந்துக்கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்த நிலையில், பாக்கு நீரிணையை நீந்திக் கடப்பதற்காக, கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை, பாதுகாப்புதுறை அமைச்சகங்களிடமும், இலங்கை தூதரகத்திடமும் அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.

இரு நாடுகளின் அனுமதி கிடைத்த நிலையில், குறித்த சிறுவன் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து கடலில் நீந்த ஆரம்பித்து, 7 மணித்தியாலங்கள், 55 நிமிடங்களில் இரவு 9.55க்கு தலைமன்னாரை வந்தடைந்து சாதனை படைத்தார். 

பின்னர் தலைமன்னாரில் இருந்து நேற்றிரவு 10.30க்கு மீண்டு நீந்த ஆரம்பித்த அவர்,  இன்று முற்பகல் 9.45க்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை சென்றடைந்தார்.

சிறுவன் சினேகன் 19 மணிநேரம் 40 நிமிடத்தில் பாக்கு நீரிணையை இரு வழியாக நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

இலங்கை கடற்படையின் கண்காணிப்புப் படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடல் பகுதியில் அந்த நாட்டு கடலோர காவல்படையின் கப்பலும், குறித்த சிறுவனின் சாதனை முயற்சிக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளன.

அதன் பின்னர், குறித்த சிறுவன் சினேகனை மண்டபம் கடலோர காவல்படை அதிகாரி மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்று பாராட்டினார். இந்த சாதனையை படைத்த பின்னர், குறித்த சிறுவன் ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.