உக்ரைன் இராணுவம் அதிரடி -புடினின் கைகளால் விருது பெற்ற ரஷ்ய தளபதி மரணம்(Video)

உக்ரைன் இராணுவம் அதிரடி -புடினின் கைகளால் விருது பெற்ற ரஷ்ய தளபதி மரணம்(Video)

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ்க்கு அருகிலுள்ள ப்ரோவரி(Brovary) மாவட்டத்தில் நடைபெற்ற சண்டையிலேயே ரஷ்யாவின் தாங்கி படைப்பிரிவின் தளபதி ஆண்ட்ரி ஜாகரோவ் கொல்லப்பட்டதாக உக்ரைனில் உள்ள செய்திநிறுவனம் NEXTA தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஆயுதப்படையால் கொல்லப்பட்ட ரஷ்ய தளபதி ஆண்ட்ரி ஜாகரோவ் கடந்த 2016ல் ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடினின் கைகளால் ஓடர் "ஒப் கரேஜ்"(Order of Courage) என்ற விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.