உக்ரைன் போர் முனையில் மலர்ந்த காதல் -வைரலாகும் வீடியோ

உக்ரைன் போர் முனையில் மலர்ந்த காதல் -வைரலாகும் வீடியோ

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இராணுவ வீரர் ஒருவர் காதலை தெரிவிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

உக்ரைன் எல்லைப்பகுதியில் வாகன சோதனை நடைபெறுகிறது. வாகனத்தில் வந்தவர்கள் கைகளை பின்னால் கட்டியபடி நிற்க வீரர்கள் அவர்களை சோதனை செய்கின்றனர்.

அப்போது அதில் இருந்த பெண் ஒருவருக்கு இராணுவ வீரர் ஒருவர் மலர் கொத்தை அளித்து தன் காதலை வெளிப்படுத்துகிறார். உடனே மகிழ்ச்சியில் அந்த பெண் அந்த வீரரை கட்டியணைத்து கொள்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.