ரஷ்ய ராணுவ துருப்புகளை தெறித்து ஓடவைக்கும் உக்ரைன்: பரபரப்பு தாக்குதல் வீடியோ ஆதாரங்கள்

ரஷ்ய ராணுவ துருப்புகளை தெறித்து ஓடவைக்கும் உக்ரைன்: பரபரப்பு தாக்குதல் வீடியோ ஆதாரங்கள்

உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய ராணுவ துருப்புகளை அந்தநாட்டின் ராணுவம் தாக்கி அழித்துவரும் வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது வைரல் ஆகிவருகிறது.

உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய தனது போரை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், இன்னும் தலைநகர் கீவ்வை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்ய ராணுவ துருப்புகள் திணறி வருகின்றனர்.

மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையிலும், போரை நிறுத்துவது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை.

ரஷ்யாவின் இந்த தாக்குதல் மனோபாவத்திற்கு உலகளவில் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேசமயம் பெரும்பாலான உலகமக்கள் உக்ரைனிக்கு ஆதரவான குரல்களையும், உக்ரைன் ராணுவத்தின் தடுப்பு தாக்குதல் வெற்றிகளை தங்களின் வெற்றியை போல் கொண்டாடியும் வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று உக்ரைனின் நிக்கோலேவ் நகரத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷ்ய ராணுவ துருப்புகளை அந்தநாட்டின் விரைவு தாக்குதல் படை தாக்கி அழிக்கும் வீடியோ ஆதாரங்களை அந்த நாட்டு ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதேப்போல, உக்ரைனின் மற்றொரு பகுதியில் நுழைந்த ரஷ்ய ராணுவ துருப்புகளின் டாங்கிகளை உக்ரைன் ராணுவம் ட்ரோன் ஏவுகணை தாக்குதல் மூலம் தாக்கி அழித்துள்ளது.

இதையடுத்து இதுகுறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆகிவருகிறது.