ஷாலினி அஜீத் முன்னணியில் கௌரவிக்கப்பட்ட விஜய்-சங்கீதா: வைரலாகும் புகைப்படங்கள்

ஷாலினி அஜீத் முன்னணியில் கௌரவிக்கப்பட்ட விஜய்-சங்கீதா: வைரலாகும் புகைப்படங்கள்

தளபதி விஜய் மற்றும் சங்கீதா திருமணம் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி நடைபெற்றது என்பது தெரிந்ததே. இன்னும் ஒருசில நாட்களில் விஜய்-சங்கீதாவின் திருமண நாள் வரவுள்ளது.

இந்த நிலையில் திருமணத்தின்போது விஜய் ‘கண்ணுக்குள்-நிலவு’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் என்பதும் இந்த படத்தில் ஷாலினி தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின் ‘கண்ணுக்குள்-நிலவு’ படத்தின் படப்பிடிப்பின்போது ஒருநாள் திடீரென படப்பிடிப்புக்கு சங்கீதாவும் வந்திருந்தார்.

இதனையடுத்து ‘கண்ணுக்குள் நிலவு’ படக்குழுவினர் விஜய், சங்கீதாவை படப்பிடிப்பு தளத்திலேயே மாலை அணிவித்து கௌரவித்தனர். இந்தக் கொண்டாட்டத்தில் கண்ணுக்குள் நிலவு நாயகி ஷாலினியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புகைப்படங்கள் பழைய புகைப்படங்கள் என்றாலும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்-சங்கீதா திருமணம் நடந்த ஒரு சில மாதங்களில் ஷாலினி, அஜித்தை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.