லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

லங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

அதற்கமைய, ஒரு லீட்டர் டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் 92 எல்.பீ வகை பெட்ரோல் லீட்டரொன்றின் விலை 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

இன்று (6) நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.