சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிக்க அனுமதி

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிக்க அனுமதி

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய் 2022 யூலை மாதம் வரைக்கும் விநியோகிப்பதற்காக தற்போது தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் வருகின்ற காலங்களுக்குத் தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இச்சுத்திகரிப்புக்குத் தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக சைப்பிரஸ் நாட்டின் Terra Navis Group இனால் கோரப்படாத முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

180 நாட்கள் கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவை அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தர பெறுகைக் குழுவின் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி அதன் ஆரம்ப கட்டமாக 450,000 பீப்பாய்கள் கொண்ட கப்பல் தொகையை விநியோகிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அப்பரிந்துரைகளுக்கமைய குறித்த மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.