சட்டவிரோதமாக இறக்குமதி செய்த வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் சிக்கினர்!
நீர்கொழும்பு காவல்துறையினரால் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகுதியுடன் இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை பிரதேசங்களை சேர்ந்த 46 மற்றும் 52 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நீர்கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.