ரொஷான் மஹாநாம பதவி விலகினார்

ரொஷான் மஹாநாம பதவி விலகினார்

விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அங்கம் வகித்த ரொஷான் மஹாநாம, அந்தக் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாம் அவரிடம் வினவியபோது, ​​தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.