கொவிட் தொற்றுறுதியான புலமைப் பரிசில் பரீட்சாத்திகளுக்கு பிரத்தியேக பரீட்சை நிலையங்கள்

கொவிட் தொற்றுறுதியான புலமைப் பரிசில் பரீட்சாத்திகளுக்கு பிரத்தியேக பரீட்சை நிலையங்கள்

இம்முறை ஐந்தாம் தர புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றவுள்ள கொவிட் தொற்றுறுதியான பரீட்சாத்திகளுக்காக  பிரத்தியேகமாக 108 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 508 பேர் இப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.