இன்று முதல் கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை!
கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை கடற்கரைகளில் நாளை முதல் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்காரணமாக தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக சென்னை கடற்கரையில் நாளை முதல் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒமிக்ரோன் கொரோனா பரவல் காரணமாக மறுஉத்தரவு வரும் வரை கடற்கரையின் மணற்பரப்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளதாகவும், பிரத்யேக நடைபாதையில் மட்டும் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கொரோனா ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.