மேலும் 335 பேர் பூரணமாக குணம்

மேலும் 335 பேர் பூரணமாக குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 335 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 546,103 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 576,194 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,661 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.