இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் நியமனம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (14) நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க மற்றும் வண. களுபஹன பியரதன தேரர் ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவும், அதன் உறுப்பினராக வண. களுபஹன பியரதன தேரரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.