கந்தானை உப ரயில் நிலையத்திற்கு பூட்டு
கந்தானை உப ரயில் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குறித்த ரயில் நிலையத்தின் துணை ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்தை கிருமி நீக்கம் செய்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.