அதிரடி காட்டிய பேஸ்புக்! 500 கணக்குகள் முடக்கம்!

அதிரடி காட்டிய பேஸ்புக்! 500 கணக்குகள் முடக்கம்!

போலி கணக்குகளைப் பயன்படுத்தி போலியான செய்திகளைப் பரப்புவது சமூக ஊடக வலையமைப்புகள் எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனையாகும்.

இதற்கு தீர்வு காண குறித்த நிறுவனங்கள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன.

இதற்கமைய, பேஸ்புக் Meta Platforms, சீனாவில் இருந்து செயல்படுவதாக அடையாளம் காணப்பட்ட சுமார் 500 போலி கணக்குகளை முடக்கியுள்ளது.

அந்த போலி கணக்குகளை பயன்படுத்தி கொவிட்டின் ஆரம்பம் குறித்த பரிசோதனைகள் தொடர்பாக போலியான செய்திகள் பரப்பப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்குகள் சுவிஸ் உயிரியலாளர் வில்சன் எட்வர்ட்ஸ் என்ற போலியான பெயரில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போலி கணக்குகளின் உள்ளடக்கங்கள் சீன ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.