ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

பாடசாலைகளில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முறையான திட்டம் வகுக்கப்படாவிட்டால் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

பாடசாலைகள் இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அதனை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பாடசாலைகளை நடத்திச் செல்வதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்றை அமைத்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.