ஹட்டன் பகுதியில் வெடிப்பு சம்பவம்

ஹட்டன் பகுதியில் வெடிப்பு சம்பவம்

 

ஹட்டன், மல்லியப்பு சந்தியில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று (29) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிர்சேதம் ஏற்படாதிருந்த போதிலும் சமையலறையிலிருந்த அதிகளவான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

குறித்த உணவகத்தில் எரிவாயு கொண்டு பயன்படுத்தப்படும் அடுப்புக்கும் சிலிண்டருக்கும் இடையில் பொருத்தப்பட்டிருக்கும் வயர் பகுதியிலேயே இவ்வாறு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகளவிலான அழுத்தத்தினால் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.