மகாவலி ஆற்றில் பாய்ந்த கார் - இருவர் மீட்பு, ஒருவரை காணவில்லை!

மகாவலி ஆற்றில் பாய்ந்த கார் - இருவர் மீட்பு, ஒருவரை காணவில்லை!

கண்டி - குருதெனிய வீதியில் இலுக்மோதர பகுதியில் கார் ஒன்று மகாவலி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எனினும் காரும் மற்றுமொரு நபரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன நபரையும் காரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.