இன்று இதுவரையில் 745 பேருக்கு கொவிட்!

இன்று இதுவரையில் 745 பேருக்கு கொவிட்!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 227 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 518 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 745 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 559,605 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 17,471 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 401 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 527,929 ஆக அதிகரித்துள்ளது.