எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்

எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில், இன்றும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில், 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் கீழ் வளிமண்டல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குறைந்த அழுத்தநிலைமை, சில மணித்தியாலங்களில் தாழமுக்கமாக மாறக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.