சிறில் காமினி பெர்ணான்டோவிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு
மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜரான அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ வாக்குமூலம் வழங்கியப்பின் அங்கிருந்து வௌியேறி உள்ளார்.
இதன்போது, இவரிடம் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு தெரிந்த தகவல்களை வழங்குவதற்காக இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 16 ஆம் திகதி சிஐடியில் ஆஜரான அவரிடம் 8 மணி நேர வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.