8 விபத்துக்களில் 8 பேர் பலி!
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் கடற்படை வீரர் ஒருவர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
விஹாரஹேன - தெனியாய வீதி வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வீதியில் இருந்து வழுக்கி அருகில் இருந்து கொங்கிரீட் பாலத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மாகொல கடற்படை முகாமில் கடமையாற்றும் 36 வயதுடைய கடற்படை அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, மாத்தளை - கண்டி வீதியின் வரகாமுர பிரதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி கொங்கிரீட் தூணில் மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி - பெல்மடுல்ல வீதியின் பாதகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது மற்றுமொரு லொறி மோதியதில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, திருகோணமலை - ஹபரணை வீதியில் 126 கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது வேன் ஒன்று மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மாத்தறை - ஹக்மன வீதியில் திஹாகொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து மோட்டார் சைக்கிள் மற்றும் பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த 55 வயதான முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வரகாபொல - கரவனெல்ல வீதியின் ருவன்வெல்ல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, பாணந்துறை - இரத்தினபுரி வீதியின் ஒலுவில பிரதேசத்தில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இரத்தினபுரியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, நெல்லியடி - பருத்தித்துறை வீதியின் பருத்தித்துறை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.