நிலவில் குடியேறிய முதல் உயிரினம்! 10 வருடங்கள் வரை நீர், உணவு இன்றி வாழும் அதிசயம்

நிலவில் குடியேறிய முதல் உயிரினம்! 10 வருடங்கள் வரை நீர், உணவு இன்றி வாழும் அதிசயம்

மனிதர்களை முந்திக்கொண்டு ஒரு உயிரினம் முதல்முதலாக நிலவில் குடியேறி உள்ளது.

அதன் பெயர் டாடிகிரேட். வெறும் அரை மில்லிமீட்டர் அளவினை கொண்ட இந்த நுண் உயிரினம்.

10 வருடங்கள் வரை நீர்,உணவு இன்றி வாழும்.

காற்றே இல்லாத விண் வெளியிலும் வாழக்கூடியது . மறை (-) 272 செல்சியஸ் முதல் + 149 செல்சியஸ் வரையிலான வெப்பநிலையை தாங்கக்கூடியது.

ஆழமான ஆழிகளின் அமுக்கத்தை விடவும் 6 மடங்கு அதிக அமுக்கத்தினை தாங்கிக்கொள்ளும்.

மனிதனால் தாங்கக்கூடிய கதிரியக்கங்களை விட 100 மடங்கு அதிக கதிர் தொழிற்பாட்டினையும் பாதிப்பின்றி தாங்கிக்கொள்ளும்.

8 சிறு கால்களையுடைய இந்த டர்டிக்ரட், 1773 ம் ஆண்டு இனங்காணப்பட்டது.

மற்ற உயிரினங்கள் வாழவே முடியாத உலகின் அனைத்து இடங்களிலும் சங்கடமின்றி வாழக்கூடியது.

இஸ்ரேலினால் நிலவுக்கு ஏவப்பட்ட ஒரு விண்வெளி ஆய்வுகலம், அங்கே சிறு சேதத்துடன் தரையிரங்கி உள்ளது. அவர்கள் அனுப்பிவைத்த டர்டிக்ரெட் உயிரினங்கள் பிழைத்தனவா இல்லையா என்பது நிச்சயமாக தெரியவில்லை.

ஆனால், வேறு எந்த உயிரினத்தையும் விட டர்டிக்ரெட் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி அவை அங்கு வாழ ஆரம்பித்தால், நிலவின் சூழலுக்கு ஏற்றாற்போல அவற்றில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது அடுத்த கேள்வி?