45 வருடங்கள் பழமையான நீர்த்தாங்கி குண்டு வைத்து தகர்ப்பு: உள்ளிருந்து மீண்டது அரியவகை ஆந்தை
மன்னார் - உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர்த்தாங்கி குண்டு வைத்து தகர்த்தப்பட்டுள்ளது.
இன்று (15) காலை 10.30 மணியளவில் இராணுவத்தின் பொறியியல் பிரிவின் உதவியுடன் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இராணுவத்தினரால் குறித்த நீர்த்தாங்கி தகர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த நீர்த்தாங்கியிலிருந்து அரிய வகை 'கூகை ஆந்தை' ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.