அலவ்வ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் - இருவர் காயம் (காணொளி)
அலவ்வ- பன்கொல்ல பிரதேசத்தில் இன்று (15) காலை வீடொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பன்கொல்ல பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்து அலவ்வ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
குண்டுவெடிப்பில் குறித்த வீடு பலத்த சேதமடைந்துள்ளதுடன், இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வீட்டின் உரிமையாளர் இதற்கு முன்னர் கல்குவாரியொன்றை நடத்தி வந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் போயவலான காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.