தலைமன்னாரில் 2.4 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 3 பேர் கைது!

தலைமன்னாரில் 2.4 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 3 பேர் கைது!

தலைமன்னார் பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போது, சுமார் 2.4 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை  இலங்கை கடற்படையினர் இன்று (15) பிற்பகல் கைப்பற்றியுள்ளனர்.

போதைப்பொருள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்றுடன் மூன்று சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் கடற்படையினர் நாடளாவிய ரீதியில் நாளாந்தம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே குறித்த ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.