நாட்டின் பல பாகங்களிலும் இன்றிரவு வேளையில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பாகங்களிலும் இன்றிரவு வேளையில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, வடமேல், மத்திய, வடக்கு மற்றும் மேல்மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அனுராதபுரம் மாவட்டத்தில் ஓரளவு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.