கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி!
தம்பகல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாரிஅராவ பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மாரிஆராவ - தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் முத்துகண்டிய வாவியில் மீன் பிடிப்பதற்காகக் காட்டு வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனைக்காகச் சடலம் தம்பகல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பகல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.