நியூசிலாந்துடன் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணி எது? பலப்பரீட்சை இன்று

நியூசிலாந்துடன் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணி எது? பலப்பரீட்சை இன்று

உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

ஏற்கனவே முதலாவது அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலாவது அணியாக இறுதி போட்டிக்குத் தெரிவானது.

உலகக்கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தெரிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.