வெலிசறை வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞரும் உயிரிழப்பு!

வெலிசறை வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞரும் உயிரிழப்பு!

வெலிசறை - மஹபாகே பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான இளைஞர் உயிரிழந்தார்.

அவர் இன்று பிற்பகல் உயிரிழந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வெலிசறை பகுதியில் கடந்த 4 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்தனர்.

16 வயதான மாணவரொருவர் செலுத்திய மகிழுந்து ஒன்று, மற்றுமொரு மகிழுந்தையும் இரு உந்துருளிகளையும், ஒரு முச்சக்கரவண்டியையும் மோதி விபத்துக்குள்ளாக்கியிருந்தது.

இந்த விபத்தில், உந்துருளியொன்றில் பயணித்த மஹபாகே பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், அவருடன் குறித்த உந்துருளியில் உடன் பயணித்த 17 வயதான இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்து ராகம வைத்தியசாலையில் கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.

எனினும், இன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.