நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ வீதியில் பாரிய மண்சரிவு!

நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ வீதியில் பாரிய மண்சரிவு!

நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ருவன்புர பகுதியில் இன்று (10) காலை 11 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இப்பகுதியில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வீதியூடாகப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை நாவலப்பிட்டியிலிருந்து ஹப்புகஸ்தலாவ மற்றும் கொத்மலை, பூண்டுலோயா, திஸ்பனை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாற்று வழியைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.