கேகாலை மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த தந்தை – மகன் சடலங்களாக மீட்பு!
கேகாலை கலிகமுவ - ஹத்னாகொட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல்போயிருந்த தந்தை, மகன் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று (10) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் வீடொன்று சிக்கியதில், அவ்வீட்டில் வசித்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் காணாமல் போயிருந்தனர்.
இந்நிலையில், அவர்களில் தாய் மாத்திரம் இன்று காலை உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையையடுத்து, தந்தை (70) மற்றும் மகன் (32) ஆகியோரின் சடலங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.