சீரற்ற காலநிலையால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
சீரற்ற காலநிலை காரணமாகக் கடந்த 24 மணிநேரத்தில் குழந்தை ஒன்று உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய, கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் சீரற்ற காலநிலை காரணமாக, மரணித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், ஐவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
16 மாவட்டங்களில், 1,836 குடும்பங்களைச் சேர்ந்த, 7,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2 வீடுகள் முழுமையாகவும், 89 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், 58 குடும்பங்களைச் சேர்ந்த 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.