சீன உரக் கப்பல் விவகாரம் இராஜதந்திர ரீதியான பிரச்சினையன்று - திலும் அமுனுகம

சீன உரக் கப்பல் விவகாரம் இராஜதந்திர ரீதியான பிரச்சினையன்று - திலும் அமுனுகம

இலங்கைக்கு சேதன உரத்தை கொண்டு வந்த சீன உர நிறுவனம் தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலரை நட்டஈடாக கோரியமை இராஜதந்திர ரீதியான பிரச்சினையல்ல என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு  நேற்று விஜயம் செய்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இது சீன அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான பிரச்சினையல்ல. அது இரு நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்சினையாகும்.

எவ்வாறாயினும், சீனாவின் கிங்டாவோ சீவிங் நிறுவனம் இந்த நெருக்கடி தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக, கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தை தொடர்ந்தும் உபயோகப்படுத்தி வருவதை காணமுடிகிறது.