இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம், திருகோணமலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு மேல் அதிக அளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அவ்வாறே, மாத்தளை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.