பாதையை கடக்க முற்பட்ட பெண்ணும், சிறுமியும் மயிரிழையில் உயிர்த்தப்பினர்! (காணொளி)

பாதையை கடக்க முற்பட்ட பெண்ணும், சிறுமியும் மயிரிழையில் உயிர்த்தப்பினர்! (காணொளி)

பியகம - பேலியகொட வீதியில் களனி பிரதேசத்தில் வாகன நெரிசல் காணப்படும் சந்தர்ப்பத்தில், போக்குவரத்து விதிகளை மீறி பயணிக்கும் சிற்றூர்தி ஒன்றின் காணொளி தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

அந்தக் காணொளியில் பாதசாரிகளுக்கான கடவையில் பெண்ணொருவர் சிறுமியுடன் வீதியைக் கடக்க முயன்றுள்ளார்.

இதன்போது குறித்த சிற்றூர்தி அதனை பொருட்படுத்தாமல் செல்லும் காட்சி சம்பவ இடத்திலிருந்த மகிழுந்தொன்றில் பொறுத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.

இதில் வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணும், சிறுமியும் மயிரிழையில் உயிர்த்தப்பியுள்ளனர்.