80 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே வீதி திறந்து வைக்கப்பட்டது

80 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே வீதி திறந்து வைக்கப்பட்டது

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று (07) கையளிக்கப்பட்டது.

கொட்டகலை – ஹட்டன் பிரதான வீதியிலிருந்து செல்லும் கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே வீதியின் புனரமைப்பு பணிகள் கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் 4.45 கிலோமீற்றர் வரையான இந்த வீதியானது 80 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டு வீதியை மக்கள் பாவனைக்குக் கையளித்தார். 

No description available.