ஹெட்டிபொல பகுதியில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு

ஹெட்டிபொல பகுதியில் வீடொன்றிலிருந்து சடலம் மீட்பு

ஹெட்டிபொல கொன்வெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தலையில் காயங்களுடன் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொன்வெவ, மடங்பொல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நீதிவான் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் வீட்டில் தனியாக இருந்துள்ளதுடன், அவரது மனைவி இல்லாத தருணத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத அதேவேளை, ஹெட்டிபொல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.