வெலிபென்ன பகுதியில் ஒருவர் கொலை!

வெலிபென்ன பகுதியில் ஒருவர் கொலை!

களுத்துறை - வெலிபென்ன காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல் அஸ்ஸகொட பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் படுகாயமடைந்த குறித்த நபர் சின்னவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் வெலிபென்ன - கல் அஸ்ஸகொட  பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளது. மரணத்தவரின் சரீரம், பிரேத பரிசோதனைகளுக்காக சின்னவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (06) மத்துகம நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள அதேவேளை, வெலிபென்ன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.