கவனயீனம் காரணமாக ஏற்பட்ட கோர விபத்து!! CCTV காணொளி

கவனயீனம் காரணமாக ஏற்பட்ட கோர விபத்து!! CCTV காணொளி

வாத்துவை, மொல்லிகொட பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் ரக வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கடந்த தினம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பிரவேசிப்பதற்காக வீதியின் குறுக்காக திருப்புவதற்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் முயற்சித்த போது எதிர்த்திசையில் வந்த கெப் ரக வாகனத்தில் மோதுண்டது.

விபத்தில் படுகாயடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கவனயீனம் மற்றும் கெப் ரக வாகனத்தின் அதிக வேகம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராவில் இவ்வா்று பதிவாகி இருந்தது.