ராமர் ஒரு இந்தியர் இல்லை அவர் ஒரு நேபாளி புதிய புரளியை கிளப்பும் நேபாள பிரதமர்.

ராமர் ஒரு இந்தியர் இல்லை அவர் ஒரு நேபாளி புதிய புரளியை கிளப்பும் நேபாள பிரதமர்.

விஷ்ணுவின் அவதாரமான ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், இந்தியா கலாசார அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நேபாளம் லிபுலேக் கணவாய் உள்ளிட்ட இந்தியப் பகுதிகளை இணைத்து வெளியிடப்பட்ட வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார் . தற்போதும் புதிய சர்ச்சை கருத்தை வெளியிட்டு உள்ளார்.

தனது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ராமர் வசித்த அயோத்தி என்பது இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் அல்ல என்றும், நேபாளத்தின் காட்மாண்டுவில் இருந்து 135 கீமீ தூரத்தில் உள்ள பிர்குஞ்ச் மாவட்டத்தில் அயோத்தி என்ற சிறு கிராமம் அமைந்துள்ளது.

நாங்கள் கலாசார ரீதியாக சற்று ஒடுக்கப்பட்டிருக்கிறோம். உண்மைகள் அத்துமீறப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள இந்து மதத்தை வழிபடும் மக்களுக்கு ராமர் கடவுளாகவும், அவர் பிறந்த இடம் அயோத்தி என்றும் நம்பப்படுகின்றது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நீண்ட காலமாக பல போராட்டங்கள் நடைபெற்றன. உச்சநீதிமன்றமும் இந்த ஆண்டில் அனுமதி அளித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.