2 இளைஞர்கள், பாதசாரி ஒருவர் விபத்தில் பலி!

2 இளைஞர்கள், பாதசாரி ஒருவர் விபத்தில் பலி!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு பூராகவும் இடம்பெற்ற சில வாகன விபத்துக்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்தெனிய, ஹிங்குருகடுவ வீதியின் பலேவெல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளான்.

ரத்தெனியவில் இருந்து ஹிங்குருகடுவ நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றில் ரத்தெனிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கொழும்பு - இரத்தினபுரி வீதியின் பொதிமலுவ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

எஹலியகொடையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரில் வந்த தனியார் பேருந்தில் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கட்டுபொத - மஹகெலிய வீதியின் கன்திரியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 36 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹகெலியவில் இருந்து கட்டுபொத நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

adstudio.cloud