நாளை முதல் தடையின்றி லிற்றோ எரிவாயு விநியோகம்
லிற்றோ நிறுவனத்துக்கு சொந்தமான 4000 மெற்றிக் டன் பெற்றோலிய திரவ எரிவாயு அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இதனால் நாட்டில் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டில் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதாக பல இடங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த இந்தத் தட்டுப்பாடு, தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தட்டுப்பாட்டைத் தணிக்க 4000 மெற்றிக் டன் எரிவாயு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.