சீரற்ற வானிலை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு (படங்கள்)
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பெரும்பாலான கரையோர தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சில பகுதிகளில் வீடுகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவு மற்றும் மன்னார் நகரசபை பகுதிக்கு உட்பட்ட பல தாழ்நிலப் பகுதிகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.








