காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உளபூர்வமாக மேற்கொள்ள வேண்டும்

காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உளபூர்வமாக மேற்கொள்ள வேண்டும்

உலக நாடுகளின் தலைவர்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளை உளப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

கிளாஸ்கோவில் நடைபெறும் COP26 காலநிலை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய கும்பிரியா (Cumbria) நிலக்கரி சுரங்க வரைவு முன்னெடுக்கப்படுவதை தாம் விரும்பவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் இந்த விடயம்குறித்து முதன் முதலாக உறுதியாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான முடிவு என்னால் எடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள அவர், திட்டமிடும் தரப்பினரால் மட்டுமே முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய மேற்கு கும்ரியா நிலகரி சுரங்கம் முழு அளவில் செயற்படுமானால் பாதகமான வாயுக்கள் வெளியேறும் என விஞ்ஞானிகள் மத்தியில் பெருகிவரும் கவலைகளுக்கு மத்தியில் பிரித்தானியா உச்சிமாநாட்டை நடத்துகின்றது.